Friday, February 25, 2011

ஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் திமுக

அதிமுக -வுடன் தேமுதிக உறவு வலுவடைவதும், பலவீனப்பட்டுள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி முறியும் சாத்தியம் அதிகமாவதும் திமுக-வுக்கு பலவீனம் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், இந்த இரண்டு காரணிகளும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான வானிலையையே தோற்றுவிக்கின்றன. இது விநோதம்தான் ஆனாலும் உண்மை.

  காங்கிரஸ் கையாலேயே பச்சைக் கொடி காட்டவைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய தகுதியுடன் 31 இடம் கொடுத்து பாமக-வை கூட்டணிக்குள்  இழுத்துக்கொண்டது திமுக-வின் உத்தி. காங்கிரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வியூகத்தின் முதல் படி அது. இதனால் திமுக-வுக்கு இரண்டு சாதகங்கள். ஒன்று, இருப்பது இவ்வளவுதான் இதில் எவ்வளவு கொடுக்கமுடியும் என்று காங்கிரசிடம் கேட்கமுடியும், இன்னொன்று, நீங்கள் வெளியே போனாலும் எங்களால் சமாளித்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை நிலையை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே ஈட்டிக்கொள்ளமுடியும்.
      இதற்குப் பிறகு காங்கிரசுக்கு உள்ள சாத்தியங்கள் மூன்று: திமுக தரும் இடங்களைப் பெற்றுக்கொள்வது அல்லது தேமுதிக-வுடன் கூட்டு சேர்ந்து தனி அணியாகப் போட்டியிடுவது அல்லது அதிமுக-கூட்டணியில் இணைவது. தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அந்தக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி இரண்டு சாத்தியங்களும் அடிபட்டுவிட்டன. அதாவது தேமுதிக-வுடன் தனி அணி காண்பதும் இயலாது, அதிமுக கூட்டணியில் நுழைவதற்கும் போதிய இடம் இருக்கப்போவதில்லை. அதிகாரபூர்வமாக அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவாகும் நிலையில், காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொள்வதா வேண்டாமா அல்லது எத்தனை இடங்கள் தருவது என்பதைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமையும் திமுக-வுக்கு வந்துவிடும்.
     காங்கிரசை திமுக கழற்றிவிடும்பட்சத்தில் அதற்கு தனியாக நிற்பதைத் தவிர போக்கிடம் இல்லை. தனித்துவிடப்பட்ட பாஜக-வுக்கு ஒரு பேச்சுத்துணை அவ்வளவே. அதே நேரத்தில் வெட்டியாக வாக்கு வங்கி இல்லாத காங்கிரசுக்குத் தரவேண்டிய குறைந்தது 60 இடங்கள் திமுக-வுக்கு மிஞ்சும், இதனால் அதிகமான இடங்களில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மைக்கான வாய்ப்புகளை திமுக அதிகரித்துக்கொள்ளும். இரண்டாவது, தேமுதிக என்னும் அனுபவமற்ற தலைவர்களை பக்குவமற்ற தொண்டர்களைக் கொண்ட பலவீனமான கட்சி சுமார் 40 இடங்களைப் பெற்றாலும்கூட அவை திமுக-வுக்கு சுலப வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடும். ஒருவேளை காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நுழையும் பட்சத்தில் யானை புகுந்த வெண்கலக் கடையாக அதிமுக முகாமில் கடும் சத்தமும் சலசலப்பும் தோன்றும். மொத்த இட ஒதுக்கீடுகளையும் மறுவரையறை செய்யவேண்டியது வரும். பழைய கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம், ஒருவேளை காங்கிரஸ் இல்லாத திமுக-வுடன் கூட்டணிக்கே வந்தாலும் வரலாம். மதிமுக-வுக்கு தார்மீக (!?) நெருக்கடி தோன்றலாம்.
          தம்மளவிலேயே பலமாக உள்ள வடக்கு மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக- துணையோடு தேர்தலை எதிர்கொள்ளும் திமுக, அந்த மண்டலத்தில் (சென்னை நீங்கலாக) கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துகொள்ளும். தென் மாவட்டங்களில் வழக்கமான தேவர் அரசியலுக்கு எதிரான தலித், நாடார் வாக்குகள் உறுதி செய்யப்பட்டால், அங்கும் திமுக-வுக்குப் பெரும் சவால்கள் இருக்காது. அந்த நிலையிலும் திமுக-வின் கவலை ரேகை சென்னை,  டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் விரவியிருக்கும். ஆனால், இந்தப் பகுதிகளில் 30-40 சதவீத இடங்களில் வென்றாலும் ஆட்சியமைப்பதற்குப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.
எப்படிப்பார்த்தாலும், காங்கிரஸ் போடும் கணக்கு தப்புக்கணக்காகப் போவதற்கே சாத்தியங்கள் அதிகம். காத்திருப்போம் காட்சிகள் விரியும், கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானது.14 comments:

ரஹீம் கஸாலி said...

அருமையான அலசல்.

ramalingam said...

திமுக ஜெயிப்பதில் ரொம்ப சந்தோஷம் போலிருக்கிறது. Nobody can predict the success. share market போலத்தான் இதுவும்.

Yoga.s.FR said...

ஜெயிச்சுட்டாலும்????????????,!!!!!!!!!!!!!!!!!

oodukathir said...

@ரஹீம், நன்றி.
@ராமலிங்கம், சந்தோஷமும் இல்லை வருத்தமும் இல்லை.
@yoga, பார்ப்போம்.

சிவா said...

நல்ல அலசல் நண்பரே! ஆனால் எப்படியும் நஷ்டம் திமுக வுக்குதான். தற்போது பாமக -திமுக கூட்டணி, அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டால், காங்கிரஸ் மூணாவது அணி அமைக்க முடியாமல் திமுக வின் பேரத்துக்கு படியும் என்று நினைகிறீர்கள். ஒரு வேலை பிஹாரில் செய்தது போல் காங்கிரஸ் தனித்து நின்றால்? காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதால் நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தனித்து நின்றால் அதனால் பிஹாரில் லாலுவுக்கு ஏற்பட்ட கதி இங்கே கலைஞருக்கு ஏற்படலாம். தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை இழந்தால், அதன் பிறகு மத்தியிலும் அதிகாரத்தை இழக்க விரும்பாமல் கூட்டணியிலே ஒட்டிகொண்டிருப்பார். எனவே காங்கிரசை-திமுக கூட்டணி உருவாகவில்லை என்றால் அதிக நஷ்டம் திமுகவுக்குத்தான். பாப்போம் கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானதுதான் .

Yoga.s.FR said...

சிவா சொல்வது போல் நஷ்டம் ஒன்றும் தி.மு.க வுக்கு இல்லை!அது தான் 1.76 இலட்சம் கோடியில் பங்கு பிரித்தாயிற்றே?தமிழ் நாட்டில் பாதி பாக்கெட்டில்!அப்புறம் நஷ்டம் எங்கிருந்து வரும்?ஓர் ஐந்து வருடம் அழகிரியோ?!,ஸ்டாலினோ?! காக்க வேண்டியிருக்கும்!அதற்குள் "அவர்" போய் விட்டால்?இப்போதிருக்கும்"ஒற்றுமை"!? அப்போதிருக்குமா?????2011 ம் ஆண்டு உலகுக்கே சோதனையான ஆண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது!துனீசியாவில் ஆரம்பித்தது,லிபியாவைத் தாக்கி யேமன்,ஈராக் என்று..................................................!.காங்கிரஸ் இறங்கி வரும் போல் தெரியவில்லை!பேச்சுக்கு வந்த "குழு" தோல்வியுற்றால்,டெல்லி திரும்புவது கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறது!மடியில் கனமிருப்பதால் "தானைத் தலைவர்" தலை குனிந்தே ஆக வேண்டியிருக்கும்!(பார்ப்போமா?பார்க்கத் தான் போகிறீர்கள்!)

bandhu said...

என்னமோ கூட்டணின்னு சொன்ன வார்த்தைக்காக உண்மையிலே அப்படி நிப்பாங்கன்னு நினைக்கறது தப்பு. நாளைக்கே பேரம் படியலன்னு காங்கிரஸ் தி மு தி க விற்கு நிறைய இடமும் தேர்தலுக்கு செலவு பண்ண பணமும் குடுத்த உடனே அ தி மு க வை கழட்டி விட மாட்டார் விஜய காந்த் -ன்னு நினைக்கறீங்க?

Yoga.s.FR said...

இது தினமணியில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் ஒரு செய்திக் கட்டுரை. இந்தக் கட்டுரையில், முதுகெலும்பே இல்லாத காங்கிரசுக்குக் கூட, சீட்டுப்
பேரம் பேசுவதில் வந்திருக்கும் தைரியம், முன்னேற்பாடு பற்றிக் கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன.

அதைவிட, பாமகவுக்கு ஒதுக்கியிருக்கும் சீட் எண்ணிக்கையை வைத்து, அதற்குக் குறைந்தபட்சம் பன்னிரண்டு சதவீத வாக்குவங்கியாவது இருக்க வேண்டுமே, இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது பாருங்கள்! அதுதான் முக்கியம்!
----------------------------------------------------
கோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக!


அஜாதசத்ரு

First Published : 25 Feb 2011 03:22:39 AM IST


காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன்
முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும்,
வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.


பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில்
வந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி

oodukathir said...

@சிவா, உங்கள் வாதத்தில் சாரமுள்ளது.
@yoga, சரடுவிடும் சுப்பிரமணியன் சுவாமியே 60 ஆயிரம்கோடி கொள்ளை அடித்ததாகக் கூறுகிறான். ஆனால், உங்களுக்கோ, 1.76 லட்சம் கோடி இல்லையா? இந்த ஸ்பெக்ட்ரம் இழப்பு கணக்கீட்டிலும், குற்றச்சாட்டிலும் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று வாதிடுவீர்கள் என்றால் நீங்கள் ரொம்...ப நடுநிலையான ஆய்வாளர்தான். அது சரி கருணாநிதிக்கு மடியில் கணம், உலகின் ஆகப் பரிசுத்தமான காங்கிரசுக்கு மடியில் கணம் ஏதும் இல்லை அப்படித்தானே? சபாஷ் நீங்கள் அஜாதசத்ரு-வின் மித்ரன்தான். ஒரே ஒரு விடுபட்ட தகவல் சிதம்பரம் பாக்கெட்டில் பேனா இருந்ததைக் கண்டு திமுக அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே......

Yoga.s.FR said...

அச்சச்சோ!தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க!காங்கிரசு "கை"?!சுத்தம்ன்னு நான் எங்கே சொன்னேன்?எல்லாம் கறை படிந்த "கை" கள் தான்!கூடவே,ஈழத் தமிழரின் இரத்தக் கறையும் எக்ஸ்ட்ராவா படிந்தேயிருக்கிறது!தி.மு.க வின் பம்மலுக்குக் காரணம் தான் நான் சொன்னது!மற்றும்படி "அவர்" தோற்பதாவது?"பிணமும் வாய் திறக்கும் "மர்மப் பொருள்" இருக்கும் வரை ஜெயிக்கலாமே?என்ன,பாவம் மக்கள்!!!!

முகமூடி said...

கண்டிப்பாக இது எதுவும் நடக்க போவது இல்லை
இந்த முறை அதிமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரிகள் ஒரு புறம்
திமுக, பாமக, காங்கிரஸ், விசி மற்றும் உதிரிகள் ஒரு புறம்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்ளவரை கண்டிப்பாக திமுக காங்கிரஸை கூட்டணியை விட்டுவிலக்காது.

சி.தவநெறிச்செல்வன் said...

ஐயா திமுக வெற்றிக்காக நிறைய ஏங்குகிறவர் போல் தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த இந்த கணக்குகள் காங்கிரஸ்புலிகளுக்கு தெரியாமலா இருக்கும். திமுக காங்கிரஸை கழட்டி விட்டால் கலைஞர் டிவி வரை வந்த சிபிஐ க்கு அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் போகுமா என்ன? பின்னர் அம்மான்னாலும் நடக்காது அப்பான்னாலும் நடக்காது.அதனால நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது, 2G ஒரு புலிவால் பிடித்தாகிவிட்டது இனி விட முடியாது.

vasan said...

All the political analysers are just calculating the plus and minus with the respective percentage of the concerned parties. DMK 30 to 33 %, AMDM 32 to 35%, Congress 12 to 15%, Communists 5 to 6% , DDMK 8 to 10%, PMK 3 to 5% Etc., The irony is the whole group of predictors, unfortunately ignored the important powerful factor who decide the VICTORY. That force is Common People. They become more and more clear and clever NOW. The cheating, fraud politicians should seek a new job after May 2011. JAI HIND.

kamesh said...

hello apadiirndllum DMK ku apputan .....

Post a Comment